search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டெல்லி அணி"

    ‘டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் நிறைய தவறுகள் செய்ததால் தோல்வி அடைந்தோம்’ என்று மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்தார். #IPL2019 #MI #RohitSharma
    மும்பை:

    ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரில் மும்பையில் நேற்று முன்தினம் இரவு நடந்த 3-வது லீக் ஆட்டத்தில் 3 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியிடம் வீழ்ந்தது.

    முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 213 ரன்கள் குவித்தது. 21 வயதான விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் 27 பந்துகளில் 7 பவுண்டரி, 7 சிக்சருடன் 78 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். பின்னர் கடினமான இலக்கை நோக்கி ஆடிய மும்பை அணி 19.2 ஓவர்களில் 176 ரன்னில் அடங்கியதுடன், அதிர்ச்சி தோல்வியையும் சந்தித்தது.

    ரிஷப் பந்த் அடித்த கடைசி பந்தை தடுக்க முயன்ற மும்பை அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா இடது தோள்பட்டையில் காயம் அடைந்ததால் பேட்டிங் செய்யவில்லை. அவர் காயத்தில் இருந்து வேகமாக மீண்டு வருவதாக மும்பை அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. அவருக்கு எடுக்கப்பட்ட ஸ்கேன் பரிசோதனை அறிக்கையில் பாதிப்பு எதுவும் இல்லை என்பது தெரியவந்துள்ளது. எனவே அவர் அடுத்த ஆட்டத்தில் ஆடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டெல்லி அணி வீரர் ரிஷப் பந்த் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

    வெற்றிக்கு பிறகு டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் அளித்த பேட்டியில், ‘உண்மையிலேயே கேப்டன் பதவியை ஏற்பதற்காக என்னை தயார்படுத்தி இருக்கிறேன். இந்திய ‘ஏ’ அணிக்கு கேப்டனாக இருந்துள்ள அனுபவம் எனக்கு உதவிகரமாக இருக்கிறது. நாங்கள் இந்த போட்டிக்காக நன்றாக தயாராகினோம். ரிஷப் பந்த் அழிவை ஏற்படுத்தக்கூடிய பேட்ஸ்மேன். கடந்த ஒரு ஆண்டில் அவர் ஆட்டத்தில் நிறைய முதிர்ச்சி கண்டுள்ளார். முதலில் சில பந்துகளை அடிக்காமல் விட்ட அவர் பின்னர் அதிரடியாக விளாசினார். அற்புதமான பேட்ஸ்மேனான அவர் எங்கள் அணிக்கு கிடைத்தது சிறப்பானதாகும்’ என்று தெரிவித்தார்.

    தோல்வி குறித்து மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா கருத்து தெரிவிக்கையில், ‘முதல் ஆட்டம் பெரும்பாலான அணிகளுக்கு சவாலானதாகவே இருக்கும். இந்த ஆட்டத்தில் நாங்கள் நிறைய தவறுகள் செய்தோம். முதல் 10 ஓவர்கள் ஆட்டம் எங்கள் கட்டுப்பாட்டில் தான் இருந்தது. ரிஷப் பந்த் அதிரடியாக ஆட ஆரம்பித்த பிறகு ஆட்டத்தின் போக்கு மாறியது. எங்களது பந்து வீச்சு திட்டத்தை செயல்படுத்த முடியாமல் போனது. இந்த தவறில் இருந்து விரைவாக பாடம் கற்றுக்கொண்டு அடுத்த ஆட்டத்துக்கு நாங்கள் நல்ல நம்பிக்கையுடன் திரும்ப வேண்டும். ஆடுகளம் கடைசி வரை பேட்டிங்குக்கு நன்றாக தான் இருந்தது. யுவராஜ்சிங் அருமையாக ஆடினார். எங்களது டாப்-4 பேட்ஸ்மேன்களில் யாராவது ஒருவர் 70 முதல் 80 ரன்கள் எடுத்து இருந்தால் ஆட்டத்தின் முடிவு வேறு மாதிரி இருந்து இருக்கலாம்’ என்றார். #IPL2019 #MI #RohitSharma
    புரோ கபடி லீக் போட்டியின் இன்று நடக்கவுள்ள ஆட்டத்தில் மும்பை அணியும் டெல்லி அணியும் மோதுகின்றனர். #ProKabbadi

    விசாகப்பட்டினம்:

    புரோ கபடி ‘லீக்’ போட்டி தற்போது விசாகப்பட்டிணத்தில் நடைபெற்று வருகிறது. இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் 106-வது ஆட்டத்தில் மும்பை- டெல்லி அணிகள் மோதுகின்றன.

    ’பிளே ஆப்’ சுற்றுக்கு ஏற்கனவே தகுதி பெற்றுவிட்ட மும்பை அணி 15-வது வெற்றி ஆர்வத்தில் உள்ளது. டெல்லி அணி 11-வது வெற்றிக்காக காத்திருக்கிறது.

    டெல்லி அணி ஏற்கனவே இந்த சீசனில் 2 முறை மும்பையிடம் தோற்று இருந்தது. இதற்கு பதிலடி கொடுத்து பிளேஆப் சுற்றுக்குள் நுழையும் ஆர்வத்தில் அந்த அணி இருக்கிறது.

    பலம் வாய்ந்த மும்பை அணியை வீழ்த்துவது டெல்லி அணிக்கு சவாலானதே.

    இரவு 9 மணிக்கு நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் தெலுங்கு டைட்டஸ்- உ.பி.யோதா அணிகள் மோதுகின்றன. தெலுங்கு டைட்டன்ஸ் 8-வது வெற்றிக்காகவும், உ.பி. யோதா 5-வது வெற்றிக்காகவும் காத்திருக்கின்றன.

    உ.பி. அணி ஏற்கனவே வாய்ப்பை இழந்து விட்டது. தெலுங்கு டைட்டர்ன்ஸ் அந்த அணியை வீழ்த்தி முன்னேற்ற பாதைக்கு செல்லும் வேட்கையில் உள்ளது.

    விஜய் ஹசாரே டிராபியின் இறுதிப்போட்டியில் டெல்லி அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை அணி கோப்பையை கைப்பற்றியது. #VijayHazareTrophy
    பெங்களூரு:

    விஜய் ஹசாரே கோப்பைக்கான உள்ளூர் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது. 37 அணிகள் பங்கேற்ற இதில் லீக், கால் இறுதி மற்றும் அரை இறுதி போட்டிகள் முடிந்துள்ளன.
     
    இந்நிலையில் பெங்களூருவில் நடந்த இறுதி ஆட்டத்தில் மும்பை, டெல்லி அணிகள் மோதின.
     
    டாஸ் ஜெயித்த மும்பை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, டெல்லி அணி களமிறங்கியது.

    அந்த அணியின் ஹிம்மத் சிங் 41 ரன்களும், துருவ் ஷோரே 31 ரன்களும், சுபோத் பாதி 25 ரன்களும், பவன் நெகி 21 ரன்களும் எடுத்தனர். மற்றவர்கள் விரைவில் அவுட்டாகினர். இறுதியில், டெல்லி அணி 45.4 ஓவரில் 177 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.



    மும்பை அணி சார்பில் தவால் குல்கர்னி, ஷிவம் துபே 3 விக்கெட்டும், துஷார் தேஷ்பாண்டே 2 விக்கெட்டும் எடுத்தனர். இதையடுத்து, 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் மும்பை அணி களமிறங்கியது.

    டெல்லி அணியின் சிறப்பான பந்து வீச்சில் சிக்கி 40 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து மும்பை அணி தத்தளித்தது.
    அதன்பின் ஜோடி சேர்ந்த சித்தேஷ் லால் மற்றும் ஆதித்யா தரே ஆகியோர் 100 ரன்கள் ஜோடி சேர்த்து அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றனர்.

    ஆதித்யா தரே 71 ரன்களும், சித்தேஷ் லால் 48 ரன்களும் எடுத்து அவுட்டாகினர். இறுதியில், மும்பை அணி 35 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 180 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றதுடன், விஜய் ஹசரே கோப்பையையும் கைப்பற்றி அசத்தியது. ஆட்ட நாயகனாக ஆதித்ய தரே தேர்வு செய்யப்பட்டார். #VijayHazareTrophy
    விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஜார்க்கண்ட் அணியை வீழ்த்தி டெல்லி அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. #VijayHazareTrophy
    பெங்களூரு:

    விஜய் ஹசாரே கோப்பைக்கான உள்ளூர் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது. 37 அணிகள் பங்கேற்ற இதில் லீக் மற்றும் கால் இறுதி போட்டிகள் முடிந்துள்ளன.
     
    இந்நிலையில் பெங்களூருவில் நேற்று நடந்த 2-வது அரை இறுதி ஆட்டத்தில் டெல்லி ஜார்க்கண்ட் அணிகள் மோதின. ‘டாஸ்’ ஜெயித்த டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, ஜார்கண்ட் அணி களமிறங்கியது. அந்த அணியின் விகாஸ் சிங் மட்டும் ஓரளவு தாக்குப் பிடித்து 71 ரன்கள் எடுத்தார். ஆனந்த் சிங் 36 ரன்களும், ஷாபாச் நதிம் 29 ரன்களும் எடுத்தனர்.

    இறுதியில், ஜார்க்கண்ட் அணி 48.5 ஓவரில் 199 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.



    டெல்லி அணி சார்பில் நவ்தீப் சைனி 4 விக்கெட்டும், குல்வந்த் கெஜ்ரோலியா, பிரான்ஷு விஜய்ரன் ஆகியோர் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.   

    இதைத்தொடர்ந்து, 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. ஜார்க்கண்ட் அணியினரின் துல்லியமான பந்துவீச்சில் சிக்கியது. அதனால் டெல்லி அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தது.

    டெல்லி அணியின் நிதிஷ் ரானா மற்றும் பவன் நெகி ஆகியோர் 39 ரன்கள் எடுத்தனர். கவுதம் க ம்பீர் 27 ரன்களும் எடுத்தார்.

    இறுதியில், டெல்லி அணி 49.4 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 200 ரன்கள் எடுத்து வெற்றி பெற்று, இறுதி போட்டியில் நுழைந்தது.

    நேற்று முன் தினம் நடந்த மற்றொரு அரை இறுதியில், ஐதராபாத் அணியை மும்பை அணி வீழ்த்தி இறுதிப்போட்டியில் நுழைந்தது. 

    பெங்களூருவில் நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் மும்பை - டெல்லி அணிகள் மோதுகின்றன. #VijayHazareTrophy
    ×